திருப்பூர் அருகே அதிர்ச்சி: போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய திமுக பேரூராட்சி தலைவர்: முதியவர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் அருகே, திமுக பேரூராட்சி தலைவர் போதையில் கார் ஓட்டி சென்று, இருசக்கரவாகனத்தில் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியத்தில் 57 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் 57 வயதான பழனிசாமி. இவர் இன்று மாலை, அப்பகுதியில் டீக்கடைக்கு டூவீலரில் சென்று, வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அதே ரோட்டில் வந்த கார் ஒன்று முதியவர் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியுள்ளது. இதன் போது பழனிசாமி உயிரிழந்துள்ளார்.

காரை ஓட்டி வந்தவர் போதையில் இருப்பது தெரியவந்த நிலையில்,  பொதுமக்கள் திரண்டு வருவதை பார்த்த அவர், காரை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற நபர், சாமளாபுரம் திமுக பேரூராட்சி தலைவரான கருகம்பாளையம் ராம் நகரை சேர்ந்த விநாயகா பழனிசாமி,(60) என்பது தெரிந்தது. உடனடியாக அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் விபத்து ஏற்படுத்திய அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elderly man dies in drunk driving accident near Tiruppur caused by DMK town panchayat president


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->