டாக்டர் திருமதி.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் நினைவு தினம்!.
Dr Mrs Muthulakshmi Reddys memorial day
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் திருமதி.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் நினைவு தினம்!.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.
அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளையும் மீறி ஆண்கள் கல்லூரியில் ஒரே பெண்ணாக சென்னை மருத்துவ கல்லூரியில் சேர்ந்து, மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்றார்.
இந்திய மாதர் சங்கத்தை தொடங்கி வைத்தவர் இவர்தான். மேலும், இவர் சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ஆவார். மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.
தற்போது உள்ள சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவரது முயற்சியால் தான் ஆரம்பிக்கப்பட்டது. இவர் பத்மபூஷண் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
எதையும் தடைகற்களாக எடுத்துக்கொள்ளாமல், படிகற்களாக எடுத்துக்கொண்டு முன்னேறிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது 81வது வயதில் 1968 ஜூலை 22 ஆம் தேதி அன்று மறைந்தார்.

புதுச்சேரி தமிழறிஞர், கவிஞரேறு திரு.#வாணிதாசன் அவர்கள் பிறந்ததினம்!.
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் 1915ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு, புனைப்பெயர் ரமி என்பதாகும்.
இவருடைய பாடல்கள் 'தமிழ் கவிதைக் களஞ்சியம்' வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலிலும், ஏனைய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன.
இவர் 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தமிழச்சி, கொடிமுல்லை ஆகிய சிறு காப்பியங்களையும், தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் ஆகிய கவிதை நூல்களையும் வழங்கியுள்ளார். எனினும் வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.
கவிஞரேறு, பாவலர் மணி, தமிழ்நாட்டுத் தாகூர், புதுமை கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட வாணிதாசன் தனது 59வது வயதில் 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்தார்.
English Summary
Dr Mrs Muthulakshmi Reddys memorial day