ராகுல் காந்தி பதவி நீக்கம் விவகாரம் | பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஒரு சமூகத்தை அவதூறாக பேசிய வழக்கியில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு இரு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இதன் காரணமாக மக்களவை உறுப்பினர் என்ற தகுதியை அவர் இழந்தார். மேலும், மக்களவை செயலாளர் ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்து அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸிடம், ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளித்ததாவது, "ராகுல் காந்தி தகுதி நீக்கம் விவகாரத்தில் பாஜக அரசு அவசரப்படாமல் இருந்திருக்கலாம்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும், மேல்முறையீட்டில் ராகுல்காந்திக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால், அப்போது அவரை தகுதி நீக்கம் செய்திருக்கலாம் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Rahul Gandhi Issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->