வாக்காளர் அடையாள அட்டை இல்லையா..? கவலை வேண்டாம்! 12 ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் - அதிரடி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு சுலபமான மற்றும் நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் தங்களின் ஜனநாயக உரிமையை தடையின்றி பயன்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையம் டிஜிட்டல் மாற்றத்தை முன்னிறுத்தியுள்ளது.
அதன்படி, ‘இசிஐநெட்’ இணையதளத்தில் உள்நுழைந்து, வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்தோ அல்லது முன்பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை பயன்படுத்தியோ, ‘ஓ.டி.பி.’ சரிபார்ப்பு முறையின் மூலம் புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டையை உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.


மாற்று அடையாள ஆவணங்கள் (ஏதேனும் ஒன்று போதுமானது):
ஆதார் அட்டை
மாற்றுத்திறனாளி அடையாள அட்டை
பான் அட்டை
தேசிய மக்கள் தொகை பதிவேடு அடையாள அட்டை
பாஸ்போர்ட்
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
புகைப்படத்துடன் கூடிய வங்கி / தபால் சேமிப்பு புத்தகம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டை
மருத்துவ காப்பீட்டு அட்டை / ஆயுஷ்மான் பாரத் அட்டை
ஓட்டுநர் உரிமம்
அரசு / பொதுத்துறை ஊழியர் அடையாள அட்டை
எம்.பி / எம்.எல்.ஏ / எம்.எல்.சி அடையாள அட்டை
முக்கிய அறிவுறுத்தல்கள்:
‘பூத் சிலிப்’ மட்டும் வாக்களிக்க செல்லத்தக்க ஆவணம் அல்ல.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டால், எந்த ஆவணத்தையும் காட்டியும் வாக்களிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont have voter ID card Dont worry You vote by showing 12 documents Action Announcement


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->