கருவிகள் வாங்க நிதி இல்லையா? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!
Doesnt the Tamil Nadu government have funds to buy equipment? Annamalai questions
தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தூய்மைப் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக, தலா ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் எண்ணிக்கையில், தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், திமுக அரசு இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், வீண் விளம்பரங்களுக்குச் செலவு செய்து கொண்டிருக்கிறது.
தனது தந்தைக்குச் சிலை வைக்க, மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரமும் நிதியும் இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா?சமூகநீதி என்று உதட்டளவில் பேசி நாடகமாடும் திமுக அரசு, இனியாவது தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமா?. என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Doesnt the Tamil Nadu government have funds to buy equipment? Annamalai questions