ரூ.30,000 லஞ்சம் வாங்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது.!
DMK panchayat president arrested in chengalpattu
மதுராந்தகத்தில் வீட்டு மனைக்கு டிடிசிபி அங்கீகாரம் வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சீவாரி கிராம ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த அரங்கநாதன் என்பவர் உள்ளார். சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் இந்த கிராமத்தில் புதிதாக வீட்டுமனைகளை பிளாட் போட்டு விற்பனை செய்து வருகிறார்.
இந்த வீட்டு மனைகளுக்கு ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு டிடிசிபி அங்கீகாரம் பெற முடியும். இதனையடுத்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதனிடம் திருமணம் நிறைவேற்றி தருமாறு ரியல் எஸ்டேட் அதிபர் கேட்டுள்ளார்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதன் அங்கீகாரம் வழங்க ஒரு வீட்டுமனையோடு, ரூ.30,000 பணம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் அரங்க நாதனை கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரியல் எஸ்டேட் அதிபர் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து அரங்கநாதனிடம் ரூ.30,000 லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது அருகில் மறைந்து இருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் அரங்க நாதனை உடனடியாக கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அரங்க நாதனை போலீசார் அலுவலகம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்போது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
DMK panchayat president arrested in chengalpattu