ஸ்டாலின், உதயநிதி படங்கள் மீது சாணி வீச்சு! செந்தில் பாலாஜி மாவட்டத்தில் சம்பவம் செய்த மர்ம நபர்கள்!
DMK office was attacked by mysterious persons
கரூர் மாவட்டம் வேலாயுதபாளையத்தில் திமுக கரூர் மேற்கு ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பெயர் பலகையை நேற்று இரவு மர்ம நபர்கள் கல்வி சி சேதப்படுத்தி உள்ளனர். அலுவலகத்தின் முன்பு கொடிய கம்பத்தில் இயற்றப்பட்டிருந்த திமுக கொடியை அறுத்து கிழித்தெரிந்து தெரிந்துள்ளனர். கரூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வரையப்பட்டு இருந்த கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, செந்தில் பாலாஜியின் படங்கள் மீது சாணியை வீசி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக பொறுப்பாளர்கள் வேலாயுதம்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வேலாயுதபாளையம் காந்தி நகரை சேர்ந்த பிரதீப் மற்றும் அண்ணா நகரை சேர்ந்த முகுந்தன் ஆகியோரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை செய்தது பாஜகவினர் தான் என சந்தேகித்த திமுகவினர் புகலூர் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் பாலத்தின் கீழ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலாயுதபாளையம் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
English Summary
DMK office was attacked by mysterious persons