கள்ளக்காதலியுடன் உல்லாசம்..வீடியோவை அனுப்பிய கணவன்.. மனைவி எடுத்த திடீர்  முடிவு! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்பவருடைய மகள் கீர்த்தி மீனா. 21 வயதான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து சிவக்குமார்- கீர்த்தி மீனா தம்பதியினர் திருப்பூர், இடுவம்பாளையம், சிவசக்தி நகர் 2-வது வீதியில் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். இப்பொது இந்த தம்பதிக்கு  2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், சந்தோஷமான வாழ்க்கையில் பெண் புகுந்துள்ளார்,அவர்தான் கணவனின் கள்ளக்காதலி சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது மனைவிக்கு தெரியவந்துள்ளது . அப்போது இது குறித்து கீர்த்தி மீனா சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை மனைவி கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

அப்போது இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்தி மீனா வீட்டில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வீரபாண்டி போலீசார் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்தி மீனாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An affair with a mistress the husband sent a video the wife made a sudden decision


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->