கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணை..முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் வழங்குகிறார்!
Appointment order for village health workers Chief Minister M K Stalin is issuing
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்-அமைச்சர் வழங்குகிறார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
வரும் 22.09.2025 காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில், 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு (VHN) பணிநியமன ஆணையை தமிழக முதல்-அமைச்சர் வழங்க உள்ளார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆய்வக நுட்புநர், உணவு பகுப்பாய்வாளர் உள்ளிட்ட 18 பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிய பிறகு அவர் பேசியதாவது:கடந்த மாதம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மூலம் 644 பணியிடங்களுக்கு பணி ஆணைகள் தரப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னாள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட ஆய்வக தொழில் நுட்புநர்கள் 42 பேருக்கு பணிவரன்முறை ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்த அரசு பொறுப்பேற்ற பின் 33,987 பேருக்கு மருத்துவத்துறையில் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கலந்தாய்வு மூலம் 43,755 பணியாளர்களுக்கு பணிமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் 2,250 VHN காலிப்பணியிடங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதில் 1,231 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.மீதமுள்ள கிராம சுகாதார செவிலியர்களுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆணையர் லால்வேனா உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
English Summary
Appointment order for village health workers Chief Minister M K Stalin is issuing