இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது.. ரஷியா பதிலடி!
The relationship with India cannot be severed Russia retaliates
ரஷியா-இந்தியா இடையேயான நீண்டகால நட்பு கலாசாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் வேரூன்றி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையோன உறவை முறிக்க முடியாது என ரஷிய தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.
இதையடுத்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 25 சதவீத அபராதம் உள்பட இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார்.. அமெரிக்காவின் மிரட்டலை கண்டுகொள்ளாத இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்கி வருகிறது. இந்த இந்தியா - ரஷியா இடையே உறவில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப் பாட்டை எடுத்துள்ளது. அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் இந்தியா உறுதியாக இருக்கிறது.
ரஷியா-இந்தியா இடையேயான நீண்டகால நட்பு கலாசாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் வேரூன்றி உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையோன உறவை முறிக்க முடியாது. இதற்கான எந்தவொரு முயற்சியும் தோல்வி அடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The relationship with India cannot be severed Russia retaliates