#BREAKING || தி.மு.க எம்.பி மீதான கொலை வழக்கு: அவகாசம் கொடுத்த உயர்நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


கடலூர், தி.மு.க எம்.பி மீதான கொலை வழக்கு விசாரணையை முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் 6 மாதம் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது. 

முந்திரி ஆலை தொழிலாளி கொலை தொடர்பாக  உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கை கடலூரில் இருந்து செங்கல்பட்டுக்கு மாற்றி ஆறு மாதத்தில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. 

இதற்கிடையே, உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு விசாரணை தொடங்கவில்லை என மனுதாரர் செந்தில் வேல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசார் மேலும் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை முடிக்க ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP murder case High Court granted time


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->