திமுக எம்.எல்.ஏ இதய வர்மன் புழல் சிறையில் அடைப்பு! நீதிபதி உத்தரவு!  - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ இதய வர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி, திருப்போரூர் செங்காடு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இதே ஊரைச் சார்ந்த இமயம் குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ இதய வர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்த சூழ்நிலையில்,  இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இமயம் குமார் தனது கூட்டாளிகள் மற்றும் ரவுடிகளுடன் அந்த நிலத்தை பார்வையிட வந்த நிலையில், இந்த விஷயத்தை அறிந்த எம்,எல்,ஏ மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். 

இதில், இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் இரு தரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில்,  இமயம் குமாரின் காரை நோக்கி எம்.எல்.ஏ துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,  காவல்துறையினர் தங்களின் விசாரணை அதிரடியாக துவக்கியுள்ளனர்.

இடத்தகராறு தொடர்பான பிரச்சனையில் 50 க்கும் மேற்பட்ட நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோஷ்டி மோதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று திருப்போரூர் எஸ்பி கண்ணன் பேட்டி அளித்தார்.

இந்த நிலையில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து காவல்துறையினர் திமுக எம்எல்ஏ இதயவர்மனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 4 டி.எஸ்.பிக்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை, திமுக எம்.எல்.ஏ தேடப்பட்டு வந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ இதயவர்மனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

இதயவர்மன் திமுக நிர்வாகி சுரேஷ் என்பவரின் காரில் சென்னைக்கு தப்பி சென்ற நிலையில், சென்னை காவல் துறையினர் மற்றும் செங்கல்பட்டு காவல் துறையினர் இணைந்து, சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விசாரணைக்காக திருப்போரூர் அழைத்து செல்லப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை புழல் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் காயத்ரி தேவி உத்தரவிட்டுள்ளார். அவர் மீது 147, 148, 324, 307, 25(1ஏ) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Idhayavarman got 15 Days prison


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal