காப்பு காட்டில் ரோடு போட்ட விவகாரம்.. திமுக அமைச்சரின் மருமகன் குற்றவாளியாக சேர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் மேடநாடு காப்பு காட்டில் ஆங்கிலேயர் காலத்தில் பாதை வசதி ஏற்படுத்தப்பட்டது. அதனை தற்பொழுது காப்பு காட்டில் ரோந்து பணிக்காக வனத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள 230 ஏக்கர் எஸ்டேட்டுக்கு செல்ல அனுமதி இன்றி காப்பு காட்டுக்குள் சாலை போடுவதாக புகார் எழுந்தது. 

இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில் காப்பு வனப்பகுதியில் அனுமதி இல்லாமல் பதிவு எண் இல்லாத பொக்லைன், ரோடு லோடர் பயன்படுத்தி சாலை போடும் பணி நடைபெறுவது தெரிய வந்தது. இதனை அடுத்து சாலை போடும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் மற்றும் ரோடு ரோலரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கோத்தகிரி கேர்பெட்டா டானிங்டன் பகுதியை சேர்ந்த திமுக அமைச்சர் மருமகனுக்கு சொந்தமான எஸ்டேட் மேனேஜர் பாலகிருஷ்ணன், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உமர் பாரூக், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பங்கேஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தமிழக அரசில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் ராமச்சந்திரனின் மருமகன் சிவக்குமார் உள்ளூர் வருவாய் அதிகாரிகளின் துணையுடன் பொக்லைன், ரோடு ரோலர் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி சாலை அமைத்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து எஸ்டேட் உரிமையாளர் என்ற முறையில் திமுக அமைச்சரின் மருமகனுக்கு வனத்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர்.

மாவட்ட வன அலுவலர் கௌதம் சார்பில் மேடநாடு காப்பு காட்டில் அமைந்துள்ள எஸ்டேட் உரிமையாளர் சிவகுமாருக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அனுப்பப்பட்ட நோட்டீஸ்க்கு பதில் அளிக்காததால் திமுக அமைச்சரின் மருமகன் சிவக்குமார் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 

கோத்தகிரி மேடைநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள பட்டா நிலத்தை சமன்படுத்த அனுமதி கோரி வழங்கப்பட்ட விண்ணப்பத்திற்கு வருவாய் துறையினர் 20 நாட்கள் அனுமதி அளித்திருந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பணிகளை செய்யாமல் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைப்பதற்கான பணியை மேற்கொண்டுள்ளது வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் எஸ்டேட் உரிமையாளர் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது நிலையில் மாவட்ட வனத்துறை அதிகாரி முன்பு ஆஜராகாததால் அவர் குற்றவாளியாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை ராமச்சந்திரனின் மருமகன் சிவக்குமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது நீலகிரி மாவட்ட திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK minister son in law accused road construction in reserve forest case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->