1 அல்ல இரண்டல்ல 3000... திமுக அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு!
DMK Minister sekar babu announce
ஈரோடு திண்டல் மலைப்பகுதியில் அமைந்துள்ள வேலாயுதசாமி கோவில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு ராஜகோபுரம் மற்றும் 186 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து கோவிலுக்கு நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, “திராவிட மாடல் ஆட்சி திருக்கோவில்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,120 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கியுள்ளது. 124 கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. 2024 இறுதிக்குள் 3,500 கோவில்களில் திருப்பணிகள் நிறைவடையும்,” என்றார். மேலும்,
திருச்செந்தூர் கோவில்: 14 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.414 கோடியில் திருப்பணி; 75% முடிந்தது. திருத்தணி கோவில்: ரூ.54 கோடி நிதியுடன் மாற்றுப் பாதை ஏற்பாடு செய்யப்படுகிறது.
சாமிமலை மற்றும் மருதலை கோவில்கள்: மின் தூக்கி அமைப்பதற்கான திட்டம் தயாராகிறது. பழனி கோவில்: இரண்டாம் கட்ட பணிக்கு ரூ.58 கோடி; 54 ஏக்கர் நிலம் கையகப்படுத்தம் நடைபெறுகிறது என்றும் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
மேலும், திண்டல் கோவிலில் கட்டப்படும் 186 அடி உயர முருகன் சிலை, ஆசியாவின் மிக உயரமான சிலையாக உருவெடுக்கப்படுகிறது. உலகத் தரத்தில் கட்டுமான நுட்பம் பயன்படுத்தப்படுவதால், இது காலத்தைக் கடந்தும் நிற்கும்.
“இந்த ஆட்சியில் மட்டும் 1,400 கோடி ரூபாய் அளவிற்கு உபயதாரர்கள் நிதி வந்துள்ளது. இதற்கான அனுமதி வழங்கப்பட்டதால் மக்கள் நம்பிக்கையுடன் நிதி வழங்குகிறார்கள். அவர்கள் எண்ணத்தின் அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
DMK Minister sekar babu announce