கடவுள் முருகன் குறித்து திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!!
DMK Minister controversial speech about God Murugan
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் "முருகன் சர்க்கரை வியாதி வரக்கூடாது என தினையை உட்கொண்டார். அவர் இரண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டா அல்லது மூன்றா? ஆமா சாமி, இரண்டு திருமணம் தான்.

அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தினை மாவு சாப்பிட்டார்" என கிண்டலாக பேசினார். இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட அவர் "ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன்" எனக் கூறி சமாளித்தார். மேலும் பேசிய அவர் தினையை, முருகனை எப்போது கண்டுபிடித்தனர் என தெரியவில்லை என பேசி மழுப்பினார்.
மேலும் வேளாண் பல்கலைக்கழகம் சர்க்கரை சத்து குறைவாக உள்ள நிலை கண்டறிய வேண்டும். வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என பேசினார். திமுக அமைச்சரின் இத்தகைய பேச்சு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
English Summary
DMK Minister controversial speech about God Murugan