ஆசை மகளையும் மனைவியையும் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் மடிந்த திமுக பிரமுகர்...! கடன் விவகாரத்தில் அரங்கேறிய கொடூரம்....! - பின்னணி என்ன...?
DMK leader who killed his daughter and wife after killing her cruelty that took place loan case What background
தர்மபுரி மாவட்டத்தில் கடன் சுமையால் மனஅழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படும் தி.மு.க. பிரமுகர் ஒருவர், குடும்பத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருந்தது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் உயிரிழந்தவர் தர்மபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (45) என்பது தெரியவந்தது.

இவர் தி.மு.க. பிரமுகராக செயல்பட்டு வந்ததுடன், முன்னாள் எம்.பி. செந்தில்குமாரின் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். தர்மபுரி கோட்டை கோவில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவருக்கு சரண்யா (36) என்ற மனைவியும், சாத்விகா (14) என்ற மகளும் இருந்தனர்.
மேலும், சந்தோஷின் உயிரிழப்பு தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்க காவலர்கள் வீட்டிற்கு சென்றபோது, வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டிற்குள் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது.சந்தேகத்தின் பேரில் காவலர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையில் இருந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.முதற்கட்ட விசாரணையில், சந்தோஷ் மேற்கொண்ட ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், பங்குச்சந்தை முதலீடுகளிலும் இழப்பு சந்தித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியும் மனஅழுத்தமும் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பலரிடம் கடன் வாங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த நெருக்கடி குடும்பத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என காவலர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழப்புக்கு முன் சந்தோஷ் பதிவு செய்ததாக தெரிவிக்கப்படும் ஒரு வீடியோவும் தற்போது விசாரணையின் ஒரு பகுதியாக உள்ளது. அதில், பொருளாதார சிக்கல்கள், கடன் சுமை மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த தனது வேதனையை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் முழு பின்னணி குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
DMK leader who killed his daughter and wife after killing her cruelty that took place loan case What background