ஹோட்டல் அதிபர்களுக்கு ஹேப்பி நியூஸ்...! வணிக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு...! - எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா...?
Happy news hoteliers Commercial cylinder prices slashed Do you know how much price reduced
புதிய மாதத்தின் முதல் நாளிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கணிசமாக குறைக்கப்பட்டிருப்பதால், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு சற்றே நிம்மதி கிடைத்துள்ளது.
நாடு முழுவதும் வீட்டு மற்றும் வணிக தேவைகளுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. வீட்டு பயன்பாட்டிற்கு 14.2 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
வழக்கமாக ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர் விலைகளில் மாற்றம் அறிவிக்கப்படும் நிலையில், இந்த மாதத்திற்கான புதிய விலை விவரங்களையும் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.அதன்படி, சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது அந்த சிலிண்டர் ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை குறைப்பு, குறிப்பாக வணிகத் துறையினருக்கு பெரும் ஆறுதலாக பார்க்கப்படுகிறது.மறுபுறம், வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனால், வீட்டு சிலிண்டர் தொடர்ந்து ரூ.957.50 என்ற பழைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது.மேற்காசிய பிராந்தியத்தில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக கடந்த 4 மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது வணிக சிலிண்டர் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, வணிகர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. இந்த விலை குறைப்பு, உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களின் செலவுச் சுமையை சற்று குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Happy news hoteliers Commercial cylinder prices slashed Do you know how much price reduced