முக ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு ஆடியோ!  - Seithipunal
Seithipunal


கடந்த 2014, 2019 ஆண்டுகளை போல வரும் 2024 ஆம் ஆண்டும் இந்திய நாடு ஏமாந்து விடக்கூடாது என்று, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'ஸ்பீக்கிங் பார் இந்தியா' என்ற தலைப்பில் தமிழ்நாட்டு மக்களிடம் மு.க.ஸ்டாலின் உரையாடி வரும் நிலையில், இன்று தனது இரண்டாவது ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

அவரின் இந்த ஆடியோ முழுக்க முழுக்க 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரமாக அமைந்துள்ளது. 

குறிப்பாக 2014, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆட்சியில் அமரவைத்து ஏமாந்தது போல, 2024 மக்களவைத் தேர்தலிலும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் அவரின் அந்த ஆடியோவில், "வரும் தேர்தலில் வஞ்சிக்கும் பாஜகவை  ஒட்டு மொத்தமாக வீழ்த்துவோம், இந்தியாவை மீட்டெடுப்போம்.

இந்தியா கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம் சாட்டும் பிரதமர் மோடி, பாஜகவின் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா? இது பற்றி விவாதித்தீர்களா? பதிலளித்தீர்களா?

வகுப்புவாதம், ஊழல், மூலதனக் குவியல், மோசடி, அவதூறுகள் கொண்ட பாஜகவின் கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே குரலாக முழங்க வேண்டும். 

மோடியின் பிம்பத்தை கிழித்துவிட்டது. சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டிருக்கிறது. 

60 மாதம் கேட்டவருக்கு, கூடுதலாக 60 மாதங்களையும் நாட்டு மக்கள் வழங்கியும், இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றி விட்டரா என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் ஆடியோவில் தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Leader MKStalin 2nd Audio


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->