வடசென்னையில் பயங்கரம்!! திமுக பிரமுகர் மகன் வெட்டி படுகொலை!!
DMK executive son hacked to death in Chennai
வடசென்னை விம்கோ நகர் பகுதியை சேர்ந்த விவேகானந்தா திருவெற்றியூர் திமுக பிரதிநிதியாக இருந்துவரும் நிலையில் அவருடைய மகன் காமராஜ் உடன் சேர்ந்து திருவெற்றியூர் பகுதிகளில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் காமராஜ் தனது அலுவலகத்திற்கு சென்று உள்ளார். அப்போது அவருடைய அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் காமராஜை அலுவலகத்தின் உள்ளே வைத்து சரமாரியாக வெட்டி உள்ளது.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த காமராஜை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 6 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வடசென்னை பகுதியில் பதற்றமான சூழல் நிலவு வருகிறது.
English Summary
DMK executive son hacked to death in Chennai