மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமைச் செயற்குழு...! ஆகஸ்ட் 22-ல் கூடும் முக்கிய ஆலோசனைக் கூட்டம்...!
DMK Executive Committee led by MK Stalin Important consultative meeting held August 22nd
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 22-ம் தேதி திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், அமைப்பு ரீதியான பணிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 22-08-2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் உரிய நேரத்தில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Executive Committee led by MK Stalin Important consultative meeting held August 22nd