விழுப்புரத்தில் பைக் - லாரி பயங்கர மோதல்...! 2 இளைஞர்கள் பரிதாப பலி...! - போலிஸ் தீவிர விசாரணை...!
Terrible bike lorry collision Villupuram 2 youths tragically died Police investigating intensively
விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையம் அருகே அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையில் நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள அண்ணாமலை ஹோட்டல் புறவழிச்சாலையில் இன்று காலை அருண் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, புறவழிச்சாலையில் திடீரென திரும்புவதற்காக அவர்கள் வாகனத்தை திருப்ப முயன்றதாக கூறப்படுகிறது.அந்த நேரத்தில், பின்னால் வந்துகொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. லாரியின் வேகமான மோதலில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டதுடன், அதில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த அருண் மற்றும் நரேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட காவலர்கள், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புறவழிச்சாலையில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Terrible bike lorry collision Villupuram 2 youths tragically died Police investigating intensively