குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி...! தமிழக டாஸ்மாக்கில் 'அந்த' 11 மதுபானங்களுக்கு திடீர் தடை...!
Citizens shock Tamil Nadu TASMAC suddenly bans those 11 liquors
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த 10 வகையான பிராந்தி மற்றும் ஒரு வகையான ரம் உள்ளிட்ட மொத்தம் 11 மதுபானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்படும் 11 வகையான மதுபானங்களையும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துவதுடன், அவற்றை நுகர்வோருக்கு விற்பனை செய்யாத வகையில் விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குடோன்களில் இருப்பில் உள்ள மேற்கண்ட 11 வகை மதுபானங்களை சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எப்.எல்.2 மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்றவர்களுக்கு இந்த மதுபானங்களை விற்பனை செய்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட 11 வகை மதுபானங்கள்
மென்ஸ்கிளப் டீலக்ஸ் பிராந்தி
ஹனி பீ ஃபைன் பிராந்தி
விஎஸ்ஓபி எக்ஸ்ஷா கோல்ட் பிராந்தி
லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி
மெக்டவல்ஸ் விஎஸ்ஓபி பிராந்தி
நம்பர் 1 மெக்டவல்ஸ் ஃபைன் பிராந்தி
என்ரிகா விஎஸ்ஓபி செலக்ட் பிராந்தி
என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி
என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி
வீரன் ஸ்பெஷல் பிராந்தி
என்ரிகா ஓல்டு இண்டி கிளாசிக் டார்க் ரம்
செயற்கை சுவையூட்டிகள் தொடர்பான சோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த மதுபானங்களுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இருப்பில் உள்ள மதுபானங்களை கடைகளுக்கு அனுப்புவதையும் விற்பனை செய்வதையும் உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Citizens shock Tamil Nadu TASMAC suddenly bans those 11 liquors