திமுகவின் பி டீம் நடத்திய சர்ச்சைக்குரிய விவாதம்.. திருமா., சுப. வீ., கீ. வீரமணி பதில் என்ன?.! - Seithipunal
Seithipunal


பிரபாகரன் செய்த இமாலய தவறுகள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தரங்கை வேண்டும் என்றே திமுக பினாமி அமைப்பு கருத்தரங்கம் நடத்தி இருக்கிறது. ஈழத்தில் போராடிக்கொண்டு இருந்த தமிழ் உறவுகளுக்கு உதவி செய்ய முன்வராமல் பல நாடகம் நடத்திய திமுக, இன்று பிரபாகரன் தவறுகள் செய்துவிட்டதாகவும் மக்களை நம்ப வைக்க பல சித்தரிப்புகளை செய்து வருகிறது. 

இது தொடர்பாக பாமக அருள் இரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " The Blunders of VP - பிரபாகரன் செய்த இமாலய தவறுகள்" எனும் நிகழ்ச்சியை Clubhouse App இணையம் மூலமாக திமுகவின் பினாமி அமைப்பான அரக்கர்கள் மன்றத்தினர் 9.6.2021 நடத்தினர்.

அக்கூட்டத்தில் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் மீது மிக மோசமான அவதூறுகளை முன்வைத்தனர். அவர்களது குற்றச்சாட்டுகள் YouTube இந்த ஒலிப்பதிவில் உள்ளது.

தமிழீழ ஆதரவாளர்களும் ஈழத்தமிழர்களும் திமுக பினாமி கும்பலின் அவதூறுகளுக்கு பதில் சொல்லாமல் போனால் - அது வரலாற்று பிழையாக போய்விடும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருப்பதால் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு இதுபோன்ற பிரச்சாரங்களை இவர்கள் மிகத்தீவிரமாக நடத்துவார்கள். இவர்களது கட்டுக்கதைகள் மேலும் பலரிடம் பரவவும் வழிவகுத்துவிடும் என்பதை எச்சரிக்கையாக குறிப்பிட விரும்புகிறோம்.

பிரபாகரன் செய்த இமாலய தவறுகள் - நிகழ்வின் ஒலிப்பதிவு இதோ: https://youtu.be/kYPGn0W06-Q

இந்த நிகழவை ஒருங்கிணைத்து நடத்திய Belongs to the Dravidian Stock திமுகவினர் பட்டியல். (இவர்களில் டான் அசோக் என்பவர்தான் முதன்மை உரை நிகழ்த்தியவர். இவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு 2013-ல் ஆஸ்திரியா ஸ்டாம்ப் எனும் போலி விருதை வழங்கி சிறப்பு பெற்றவர்) " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுப. வீரபாண்டியன், கே.எஸ்.இராதாகிருஷ்ணன், கி. வீரமணி, தொல். திருமாவளவன் உள்ளிட்ட திமுக ஆதரவாளர்கள் இதற்கு என்ன பதில் தெரிவிக்கப்போகிறார்கள் என காத்திருந்து பார்க்கலாம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK B Team Make Controversy Speech about LTTE Prabharkaran Make wrong


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal