சென்னை - கன்னியாகுமரி, திருநெல்வேலி - செங்கல்பட்டு வழியில் தீபாவளி பண்டிகை ஸ்பெஷல் ரெயில்கள்...!
Diwali festival special trains Chennai Kanyakumari Tirunelveli Chengalpattu route
பெருநாள் பண்டிகைகள் வருவதையொட்டி பயணிகளின் அதிகப்படியான தேவையை பூர்த்தி செய்ய, தெற்கு ரெயில்வே பல்வேறு சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (06151/06152)
சென்னை புறப்பாடு (06151): செப்டம்பர் 22, 29, அக்டோபர் 06, 13, 20 (திங்கட்கிழமைகள்) இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.20 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.

கன்னியாகுமரி புறப்பாடு (06152): செப்டம்பர் 23, 30, அக்டோபர் 07, 14, 21 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
திருநெல்வேலி – செங்கல்பட்டு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் (06154/06153)
திருநெல்வேலி புறப்பாடு (06154): செப்டம்பர் 26, 28, அக்டோபர் 03, 05, 10, 12, 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் (வெள்ளி & ஞாயிறு) அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.
செங்கல்பட்டு புறப்பாடு (06153): அதே தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை திருநெல்வேலியை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 20ஆம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
பெரும் பண்டிகை கால நெரிசலை தவிர்க்க விரும்புவோர், உடனே முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Diwali festival special trains Chennai Kanyakumari Tirunelveli Chengalpattu route