தீபாவளி: இன்று தமிழ்நாடு முழுவதும் நடந்த சம்பவங்கள்! சிகிச்சையில் 82 பேர் - தீயணைப்புத்துறை தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் இன்று பிற்பகம் 12 மணி வரை தீபாவளிக்கு பட்டாசு வெடித்து 82 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ₹5,000 மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று இரவு முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்து வரும் நிலையில், சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்திருந்தது.

மேலும், சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடர்ந்து மோசம் என்ற அளவில் அதிகரிக்கும் காற்று மாசு என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு, கடலூர் மற்றும் கோவையிலும் காற்றின் தர குறியீடு மிதம் என்ற அளவில் அதிகரித்து உள்ளதாகவும், சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்திருந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Diwali Celebration tamilnadu chennai fire accident


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->