திருப்பூர் சுப்ரமணியம் திரையரங்குக்கு நோட்டீஸ் அனுப்பிய மாவட்ட நிர்வாகம்: இதுதான் காரணம்!
District Administration sent notice to Tirupur Subramaniam Theatre
நடிகர் சல்மான் கானின் வெற்றி திரைப்படங்களில் ஒன்றான டைகர் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் தற்போது வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் கார்த்ரீனா கைப் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாகி உள்ளது.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் இந்த படத்தினை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், திருப்பூரில் உள்ள தனக்கு சொந்தமான திரையரங்கில் இந்த திரைப்படத்தை 6 காட்சிகளை திரையிட்டுள்ளார்.
தமிழக அரசின் அறிவிப்புகளில் அதிகபட்சமாக ஒரு திரைப்படம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். முதல் காட்சி காலை 9 மணிக்கு துவங்கி இரவு 12 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடிக்க வேண்டும்.

லியோ, ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற திரைப்படங்களுக்கு அரசு அனுமதி அளித்த பின்பு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
ஆனால் டைகர்-3 படத்துக்கு எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை. இருப்பினும் திருப்பூர் சுப்பிரமணியம் இந்த படத்தை காலை 7 மணியிலிருந்து திரையிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவர் முன்னதாக லியோ படத்தால் தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என தெரிவித்து சர்ச்சைகளை கிளப்பினார். தற்போது அரசு அனுமதி பெறாமல் தன் திரையரங்கில் அதிக காட்சிகளை திரையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
District Administration sent notice to Tirupur Subramaniam Theatre