காதலுக்கு ஜாதியில்லை.. திருமணத்திற்கு ஜாதி தடை.. கொடூரனால் அரங்கேறிய பயங்கரம்.. உயிரிழந்த பெண்மணி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம் அருகேயுள்ள டெக்ஸ்டைல் மில்லுக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில், அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையில், அந்தப் பெண்மணி வேடசந்தூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது. 

விசாரணையில், அப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ, கடந்த 1 ஆம் தேதி வேலைக்கு சென்று பின்னர் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரின் அலைபேசியை சோதனை செய்கையில், அவர் மாயமான நாளில் 20 க்கும் மேற்பட்ட முறை வாலிபர் ஒருவரிடம் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, அந்த எண்ணை ஆய்வு செய்கையில், அவருடன் பணியாற்றி வந்த தங்கதுரை என்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், தங்கதுரை தனியார் நூற்பாலையில் தங்கி பணியாற்றி வருகையில், ஜெயஸ்ரீயுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுடனான பழக்கம் பின்னாளில் காதலாக மாறி, இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர். 

இந்நிலையில், தங்கதுரையிடம் ஜெயஸ்ரீ திருமணம் செய்யக்கூறி வற்புறுத்தவே, ஜாதி தடையாக இருப்பதாக காரணம் கூறி தங்கதுரை திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதன்பின்னர், இவர்களின் காதல் விவகாரம் ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. ஜெயஸ்ரீயை அவரது பெற்றோர் கண்டித்த நிலையில், கடந்த 31 ஆம் தேதி அன்று இரவு காதலனுக்கு தொடர்பு கொண்ட ஜெயஸ்ரீ மறுநாள் காலையில் ஒட்டன்சத்திரத்திற்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து, கடந்த 1 ஆம் தேதி மாலையில் வேலையை முடித்துவிட்டு, ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்த ஜெயஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் வந்த தங்கதுரை மற்றும் அவனது நண்பன் ஜெகநாதன் கள்ளிமந்தையம் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காதல் முறிவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.  

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தங்கதுரை மற்றும் அவனது நண்பன் ஜெகநாதன் ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் என்பதன் அர்த்தம் மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. உண்மையான காதல் சில இருந்தாலும், காதலன் கொடூரனாக இருந்தால் என்ன மாதிரியான விபரீதம் பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் என்பதற்கு இதுவே சாட்சி..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindigul Love Issue girl Murder 9 Jan 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->