பிரண்ஸ் ஆப் போலீஸ் கொழுப்பு, தடை செய்தும் தாண்டவம்.. இப்பயெல்லாம் டிஜிட்டல் வசூல் சார்..! - Seithipunal
Seithipunal


அம்மையநாயக்கனூர் பகுதியில் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வசூல் செய்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர், நாளடைவில் தனியாக கூகுள் பே மற்றும் போன் பே வாயிலாக வசூல் வேட்டையில் இறங்கிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆயுதப்படை காவலர்கள் போல உடையணிந்து கொண்டு காவல்துறையினருடன் நின்று வந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினர் செய்த சம்பவங்கள் தற்போது வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆக வேலை பார்த்து வந்த தவமணி. இவர் பிரண்ஸ் ஆப் போலீஸ் தடை செய்யப்பட்டதில் இருந்து, காக்கி பேண்ட் மட்டும் போட்டுக்கொண்டு உளவுப்பிரிவு போலீஸ் எனக்கூறி போன் மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். 

துவக்கத்தில், அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதிகளில் காவல்துறையினர் இரவு நேர வாகன சோதனை செய்யும் சமயத்தில், காவல்துறையினருக்கு மாமுல் வாங்கி கொடுக்கும் கையாளாக செயல்பட்டு வந்த தவமணி, பின்னாளில் முறைகேடான தொழில் செய்பவர்களிடம் இருந்து காவல்துறை இருக்கும் வசூல் செய்து கொடுத்துள்ளார். 

தினமும் பல ஆயிரங்கள் கையில் வந்து சென்றாலும், காவல்துறை அதிகாரிகள் ரூ.500 முதல் ரூ.1000 மட்டும் வழங்குவதால், காவல்துறையினருக்கு தெரியாமல் கூகுள் பே மூலமாக ஆன்லைன் பரிவர்த்தனை செய்து தனது அக்கவுண்டிற்கு நேரடியாக ரூ. 500 முதல் ரூ. 5000 வரை வசூல் செய்து வந்துள்ளார். இந்த தகவல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே காவல் நிலைய ஆய்வாளருக்கு தெரியவந்த நிலையில், காவல்துறை ஆய்வாளர் தவமணியை எச்சரித்து அனுப்பி உள்ளதாக தெரியவருகிறது. 

இந்த நிலையில், தேர்தல் நேரம் வந்ததும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சில காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நீண்ட ஆண்டுகளாக காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அதிகாரமிக்க காவலர்களின் உதவியோடு, மீண்டும் தவமணி சேட்டை செய்ய ஆரம்பித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளப்பட்டி சோதனைச் சாவடியில், சிவகாசியில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு அட்டைப்பெட்டி ஏற்றி சென்ற லாரிகளை மடக்கிய தவமணி, லாரி ஓட்டுனர் சித்திக்கிடம் உளவுப் பிரிவு காவல்துறையினர் என்று கூறி ஆவணங்களை பரிசோதித்தார். 

அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்த நிலையில், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் கட்டவேண்டும் என்று கூறவே, லாரி ஓட்டுநர் சித்திக் மது அருந்தவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், ரூபாய் ஐந்தாயிரம் கொடுத்தால்தான் வாகனத்தை விடுவேன் என்று தவமணி மிரட்டியுள்ளார். பணம் கையில் இல்லை என்று கூறியதும், கூகுள் பே மூலமாக எனக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி பணவரித்தனை செய்ய வைத்துள்ளார். 

இதனையடுத்து, நடந்த அனைத்தையும் விடியோவாக பதிவு செய்துகொண்ட லாரி ஓட்டுநர், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியாவிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்ய உத்தரவிட்ட நிலையில், விசாரணையில் தவமணி செய்த சேட்டைகள் அம்பலமானது. இதனையடுத்து தவமணியை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக இருந்த காவல்துறை அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Ammainaickanur Police Offence Bribery with Banned Friends Of Police Activity 29 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal