பொதுக்கூட்டத்துக்கு டிஜிட்டல் பேனர் வைக்கப்பட வேண்டும்..தொண்டர்களுக்கு வி சி க அறிவுறுத்தல்!
Digital banners should be placed for the general meetinginstructions for the volunteers
திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் ஜூலை 19 செங்கல்பட்டு மாவட்டம்மறைமலை நகரில் நடைபெற உள்ளது .இந்நிகழ்ச்சியில் எழுச்சி உரையாற்ற தேசிய தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்,
பொதுக்கூட்டம் கூட்டம் குறித்து கட்சியின் மேலிட பொறுப்பாளர் அண்ணன் சூ.க. விடுதலைச் செழியன், மாவட்ட செயலாளர் தே.தென்னவன் ஆகியவர்கள் திருப்போரூர் வடக்கு ஒன்றியத்திற்கு ப.விடுதலை நெஞ்சன் மற்றும் எல் உதயகுமார்(என்னையும்)மாவட்ட மேலிட பொறுப்பாளராக அறிவித்தனர். அதன் அடிப்படையில் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் மேல கோட்டையூர் ஊராட்சியில் பொதுக்கூட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம்நடைபெற்றது ,
இந்நிகழ்ச்சி கலந்தாய்வில் மேல கோட்டையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட பொறுப்பாளர்கள் வீர கணேசன் ,கானா சகி ,சிலம்பரசன் ,பிரேம்குமார் ஏர்வே மூர்த்தி ,அன்பு, , தாஸ் ,உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .முன்னதாக மேல கோட்டையூர் ஊராட்சியில் உள்ள ஆறு முகாம் செயலாளர்கள் மற்றும் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் உரையாற்றினார்கள் ஆற்றினார்,
அப்போது கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,
1)ஒவ்வொரு முகாமிலிருந்தும் வாகனங்கள் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
2)முகாம் தோறும் பொதுக்கூட்டம் குறித்த டிஜிட்டல் பேனர் வைக்கப்பட வேண்டும்,
3) ஒவ்வொரு முகாமிலிருந்தும் குறைந்தபட்சம் 20 தோழர்கள் மதச்சார்பின்மை பேரணிவிளக்க பொதுக் கூட்டத்திற்கு திரட்டப்பட வேண்டும்,
4)தேசிய தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் நம்முடைய மாவட்டத்திலிருந்து குறைந்தபட்சம் 1 லட்சம் தோழர்களை திரட்டப்பட வேண்டும்
5)திருச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு கிராமம் தோறும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் ஒன்றிய செயலாளர் அண்ணன் ப. விடுதலை நெஞ்சன் மற்றும் நான் எல் உதயகுமார் சிறப்புரையாற்றினார்.
திருச்சியில் நடைபெற்ற மதச்சார்பின்மை காப்போம் பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்ட செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எல்.உதயகுமார் வழக்கறிஞர் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி அவர்கள் கலந்துகொணடர்.
English Summary
Digital banners should be placed for the general meetinginstructions for the volunteers