டிஜிட்டல் கைது என வலைவீசி ரூ.20 லட்சம் மோசடி..2 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்!   - Seithipunal
Seithipunal


டிஜிட்டல் கைது என வலைவீசி ரூ.20 லட்சம் மோசடி செய்த இரண்டு வாலிபர்களை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 சம்பவத்தன்று திருவனந்தபுரம் அருகேயுள்ள கொஞ்சிரைவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரின்  செல்போனில் தொடர்பு கொண்ட நபர், பண மோசடியில் உங்களுக்கு தொடர்புள்ளதாகவும், டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அஷ்ரப், இணைப்பை துண்டித்துவிட்டார். 

அதனை தொடர்ந்து வந்த வீடியோ காலை எடுத்து பேசியபோது, எதிர் முனையில் போலீஸ் சீருடையில் 2 பேர் தோன்றி,உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம். அதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் ரூ.20 லட்சத்தை கொடுக்கவேண்டும் வேண்டும். விசாரணை முடிந்ததும் அந்தப் பணத்தை திருப்பித் தந்து விடுவோம் என்றனர்.

இதனை நம்பிய  அஷ்ரப் வீடியோ காலில் வந்த போலி போலீசார் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு ரூ.20 லட்சத்தை செலுத்தியுள்ளார். எனினும் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் திருப்பித் தராததால், அஷ்ரப் திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அஷ்ரப் செலுத்திய ரூ.20 லட்சம் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டியைச் சேரந்த பேச்சிகுமார்  என்பவருடைய வங்கிக் கணக்கிற்குச் செலுத்தப்பட்டிருந்த்து தெரிய வந்தது.

இதையடுத்து  சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்று பேச்சிகுமாரை பிடித்து விசாரித்ததில், கடையம் பெரும்பத்தை சேர்ந்த கிரிப்சன் என்பவர் கூறியதால் இந்த மோசடியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் கூறினார். 

மோசடி செய்த பணத்தை கிரிப்சன் ரூ.1 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையில் செலுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும்  கைது செய்தனர். பின்னர் இருவரையும் கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Digital arrest leads to a scam of 20 lakhs Police have arrested 2 people in a major crackdown


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->