தருமபுரி | சீரமைக்காத சாலையில் நாற்று நடும் பெண்கள்! அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மக்கள்!
Dharmapuri women protest against non alignment road
தருமபுரி மாவட்டம்: நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டை பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து அதியமான் கோட்டை கிராமத்திற்கு செல்லும் சாலைகள் மிகவும் பழுதடைந்து நிலையில் மண் சாலையாகவே மாறி காட்சி அளிக்கிறது.
அதியமான் கோட்டையின் கிராம பகுதியின் நடுவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு இச்சாலை வழியாக தான் பொதுமக்கள் அனைவரும் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில் இரு தினங்களாக பெய்த மழைக்கு சாலை முழுவதும் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளதால் நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர்க்கு பெரும் சிரமாக உள்ளது.
இது குறித்து பல முறை மனுக்கள் கொடுத்தும், நேரடியாக முறையிட்டும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் வேறு வழியின்றி, இன்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து தெரிவிக்கையில், 'புதிய சாலை அமைக்கும் பணியில் அதிகாரிகள் இனியும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்தவும் தயங்க மாட்டோம்.
மேலும் இந்த பழுதடைந்த சாலையை மாற்றி புதிய தார்சாலை போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Dharmapuri women protest against non alignment road