தர்மபுரி: டாக்டர்களே இதை செய்ய தயங்குவார்கள்... உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? கைது செய்யப்பட்ட செவிலியர்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்த சம்பவத்தில் பெண் செவிலியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு முயற்சி நடைபெற உள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி அதிரடி சோதனை மேற்கொண்டார். 

அப்போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய முயன்ற பெண் செவிலியரை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய அஞ்சும்போது செவிலியர் ஆன உனக்கு என்ன தைரியம் என்று அந்த செவிலியரை இயக்குனர் சாந்தி சரமாரியான கேள்விகளை எழுப்பி கண்டித்தார்.

தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி கடந்த சில வாரங்களாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் சட்டவிரோத கருக்கலைப்பு மையங்கள் செயல்படுவதை தடுப்பதற்கு உண்டான தீவிர நடவடிக்கையில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuri illegal abortion centre nurse arrested


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->