தருமபுரி | வெடி மூட்டையில் தீப்பற்றி விபத்து! திருவிழாவுக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்!  - Seithipunal
Seithipunal


பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவிற்காக பட்டாசு வெடித்த போது வெடி இருந்த மூட்டையில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி, பாலக்கோடு அருகே உள்ள கருப்பா கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 27) காரிமங்கலம் மொரசுப்பட்டியில் இவரது குலதெய்வ கோவில் திருவிழாவை ஒட்டி கருப்பா கோட்டை கிராமத்திலிருந்து பரசுராமன் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று இரவு சிறிய சரக்கு வாகனம் மூலம் மொரசுப்பட்டிக்கு சென்றனர். 

அந்த வாகனத்தில் திருவிழாவுக்கு தேவையான நாட்டு வெடிகள் அடங்கிய முட்டைகள் இருந்தன. கருப்பா கொட்டாய் பகுதியில் உள்ள மக்களை ஏற்றிச் செல்ல சரக்கு வாகனம் ஆங்காங்கே நிறுத்தப்படும் போதெல்லாம் வண்டியில் இருந்த வெடிகளை உற்சாகத்துடன் வெடித்துள்ளனர். 

இவ்வாறு வெடிகளை தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்தபோது பேளாரஅள்ளி விநாயகர் கோவில் பகுதியில் எதிர்பாராத விதமாக சரக்கு வாகனத்தில் இருந்த நாட்டு வெடிகள் கொண்ட மூட்டைகள் மீது தீப்பொறி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் கருப்பா கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் மகன் விஜயகுமார் (வயது 21), பரசுராமன், பிரதக்சனா, தர்ஷன் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

பின்னர் அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையில் சேர்க்கப்பட்டவர்களில் விஜயகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்து விட்டார்.

காயம் அடைந்த மற்றவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் இந்த விபத்து தொடர்பாக பாலக்கோடு காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருவிழாவுக்கு பயன்படுத்திய வெடியில் தீ பற்றி விபத்து ஏற்பட்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuri Explosive fire accident young man died 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->