காதலித்து திருமணம்.. இரண்டாவது மனம் முடித்த கொடூரனால், மனம் நொந்த பெண்..! - Seithipunal
Seithipunal


காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் வீட்டுமுன் மனைவி தர்ணா போராட்டம் நடத்திய நிலையில், அவரை அடித்து துன்புறுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது. 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் மணிகண்ட ராஜா. இவர் சென்னையில் உள்ள சாலி கிராமத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், அவரை ஏமாற்றிவிட்டு பின்னர் இரண்டாவது திருமணம் செய்ததாக தெரிகிறது. 

இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் என்பதால், தன்னை ஒதுக்கி விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததாகவும் புகார் மனுவில் கூறியிருந்தார். 

இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று கணவரின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் வந்திருந்த குடும்பத்தினரையும் தாக்கிய நிலையில், இதில் படுகாயமடைந்த பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Culprit Cheated girl Protest at Home 8 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal