இரட்டை தலை கொண்ட கன்று குட்டி: ஆச்சர்யத்தில் பொதுமக்கள்!
dharmapuri cow calf born with double head
தர்மபுரி அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர். இவர் விவசாயம் செய்பவர். இவர் 2 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.
அவர் வளர்த்து வந்த பசுமாட்டில் ஒன்று கருத்தரித்து இருந்த நிலையில் ஆண் கன்றை ஈன்றது. அந்த கன்றுக்குட்டி சாதாரண கன்று போல் இல்லாமல் 2 தலைகளுடன் பிறந்தது.
2 வாய், 2 மூக்கு, 4 கண்களுடன் பிறந்துள்ள கன்றுக்குட்டி குறித்த தகவல் சிறிது நேரத்தில் அருகில் உள்ள கிராமம் முழுவதும் பரவ தொடங்கியது.

இதனால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி பார்த்து புகைப்படம் எடுத்து சென்றனர்.
மேலும் இந்த கன்று குட்டி கடவுளின் ஆசிர்வாதத்தால் பிறந்திருப்பதாக கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர். பசுவின் உரிமையாளர் ரவீந்தர் பசு மாட்டையும் கன்று குட்டியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
English Summary
dharmapuri cow calf born with double head