தருமபுரி | சரக்கு வேனில் சிக்கிய 750 கிலோ குட்கா - அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்!
Dharmapuri 750 kg Gutka stuck cargo van
தமிழகத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாகனங்கள் மூலம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து போலீசாருக்கு மாவட்ட எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் போலீசார் குண்டல்பட்டியில் இன்று தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சரக்கு வேணும் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதனை போலீசார் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தபோது பெரம்பலூர் குன்னம் பகுதியில் சேர்ந்த ஓட்டுனர் சிவகுமார் (வயது 30) கிருஷ்ணகிரியை சேர்ந்த குமார் (வயது 35) ஆகிய இருவரும் சரக்கு வேனில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
போலீசார் உடனடியாக இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சரக்குவேன் மற்றும் 750 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து கைதான 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Dharmapuri 750 kg Gutka stuck cargo van