சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மரம் விழுந்து 2 பேர் படுகாயம்! வாகன ஓட்டிகள் அவதி! - Seithipunal
Seithipunal


தர்மபுரி, நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 45) இவர் தர்மபுரியில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு காரில் தாத்தா, பாட்டியை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அதே போல் பெரியண்ணன் (வயது 55) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

இந்த இரண்டு வாகனங்களும் ராமக்காள் ஏரி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த மரம் சாய்ந்து கார் மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் இரண்டு வாகனங்களும் மரக்கிளைகளின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. 

இந்த விபத்தில் கார் ஓட்டுனர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெரியண்ணா இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த தர்மபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dharmapuri 2 people injured tree fell on the road


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->