வாக்குப்பதிவு நிறைவு! பாதுகாப்பை பலப்படுத்த சைலேந்திர பாபு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. பல இடங்களில் சிறு பிரச்சினைகள் எழுந்த போது அந்த இடங்களுக்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட, மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள், மண்டல காவல்துறை தலைவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் பணி இன்னும் முடியவில்லை என்றும், சில பிரச்சினைகள் இனிமேல்தான் தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், பிரச்சனையான பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தன்னுடைய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகளை வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்படைத்த பின்னர், தலைமை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், தீவிர கண்காணிப்பு பணிகள் மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என்றும் அவர் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DGP instructions


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->