சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில் அமைந்துள்ள பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், பல்வேறு முக்கிய நாட்களில் மட்டும் சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல வனத்துறையின் அனுமதி அளித்து வருகிறது.

அந்த வகையில் நாளை சித்திரை மாதம் தொடங்கும் நிலையில் ஏப்ரல் 16-ஆம் தேதி பௌர்ணமி நாள். சித்திரை பௌர்ணமி மகாலிங்கம் திருக்கோயிலில் வழிபாடு செய்ய முக்கியமான நாள் என்பதால் ஏப்ரல் 16 முதல் 5 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தமிழக வனத்துறை அனுமதி அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees allowed to chaturagiri temple for full moon


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->