திருமணம் நடக்காத ஏக்கம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தோல் மருத்துவர்..!
Dermatologist commits suicide by hanging himself due to longing for an unfulfilled marriage
திருமணத்திற்கு பல பெண்கள் பார்த்தும் எதுவும் அமையாத காரணத்தினால் ஏக்கத்தில் இருந்த டாக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூர் 02-வது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் ஐடெல் மகிழ்குமாரி. கடந்தாண்டு இவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். இவரது மூத்த மகன் சர்ச்சில் பாஸ் லியாட் டாக்டராக உள்ளார். நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தோல் சிகிச்சை மருத்துவராக வேலை பார்த்து வந்த இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், இவருக்கு சில மாதங்களாக திருமணத்திற்காக ஏராளமான பெண்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனால் எதுவும் அவருக்கு அமையவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை தனது தாயார் ஐடெல் மகிழ்குமாரியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, டாக்டர் சர்ச்சில் பாஸ் லியாட் வலியுறுத்தியுள்ளார். அதன் பின்னர் இரவு படுக்கையறைக்கு சென்ற டாக்டர் அறையில் இருந்த மின்விசிறியில் சால்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில், அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இருப்பினும் பழவந்தாங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்தபோதும் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து டாக்டரின் சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
Dermatologist commits suicide by hanging himself due to longing for an unfulfilled marriage