காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: பல் மருத்துவர் அதிரடி கைது..!
Dentist arrested for sexually harassing college student in Kanchipuram
கல்லூரி மாணவி ஒருவருக்கு, பல் மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான பல் மருத்துவர் மணிகண்டன். இவர் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 03-வது ஆண்டு படிக்கும் 20 வயது மாணவி ஒருவர் பல் மருத்துவ சிகிச்சை பெற வந்துள்ளார். அப்போது அந்த மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அந்த சூழலில் பல் மருத்துவமனையை விட்டு உடனடியாக மாணவி வெளியேறியுள்ளார். அடுத்து, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தனக்கு நேரத்தை சம்பவம் குறித்து புகார் செய்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியத்தில் பல் மருத்துவர் மணிகண்டன் குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவரை சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
English Summary
Dentist arrested for sexually harassing college student in Kanchipuram