குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காலக்கெடு 2024 டிசம்பர் 31 வரை நீடிப்பு: மத்திய அரசு அறிவிப்பு..!
The Central Government has extended the deadline for the Citizenship Amendment Act till December 31st 2024
அண்டை நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு இடம்பெயர்ந்த சிறுபான்மையிருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காலக்கெடு 2014 டிசம்பர், 31 தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
குறித்த நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருந்த ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும். கடந்த 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன், அந்த நாடுகளில் சித்ரவதைகளை சந்தித்து, அகதிகளாக வந்தவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இதற்கான சட்டம், கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கடந்த 2014, டிசம்பர் 31க்கு முன், நம் நாட்டுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த ஓராண்டில் கட்டாயம் இங்கு வசித்திருக்க வேண்டும் என்றும், அதற்கு முந்தைய 14 ஆண்டுகளில், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நம் நாட்டில் தங்கியவர்களுக்கு இந்த குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் காலக்கெடு 2014-இல் இருந்து 2024 டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த வெளிநாட்டு சிறுபான்மையினரும் பயன் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
English Summary
The Central Government has extended the deadline for the Citizenship Amendment Act till December 31st 2024