டெங்கு காய்ச்சலால் 7 மாத குழந்தை உள்பட 2 பேர் பலி! பீதியில் மக்கள்!
dengue fever woman 7month baby dead
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து மதுரை மாநகரம் முழுவதும் தொற்று நோய், வைரஸ் காய்ச்சல் என பரவி வருகிறது.
இதனால் நோயாளிகள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலின் காரணமாக 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார். இவர் வெளிநாட்டில் கப்பலில் ஊழியராக பணியாற்றிய வருகிறார். இவரது மனைவி சத்தியபிரியா (வயது 41).

இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சத்திய பிரியாவுக்கு கடுமையான காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் சத்திய பிரியா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதுபோல் மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த அவர் கண்ணன் (வயது 38). இவர் ஓட்டுனராக பணியாற்றுகிறார். இவருக்கு அனன்யா என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது.

இந்த குழந்தைக்கு கலந்து சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்துகள் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சு திணறால் ஏற்பட்டதால் உடனடியாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மதுரை மாவட்டத்தில் காய்ச்சலால் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dengue fever woman 7month baby dead