இரு உயிர்கள் ஒன்று ஆன நாள்...! திருநங்கைக்கு குவியும் திருமண வாழ்த்து...!
day two lives become one Wedding wishes pour transgender woman
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே இருக்கிற ஓமலூரைச் சேர்ந்த சரவணகுமார் (32 ) என்பவர் தன்னுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான திருநங்கை சரோ என்பவரை காதலித்து, இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் அமைந்த பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடந்தது.இந்த திருமண நிகழ்ச்சியை திராவிடர் கழக மாவட்டத் தலைவர், வழக்கறிஞர் மு.சென்னியப்பன் தலைமையில் நடத்தப்பட்டது.
இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி, சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதில் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர், காதல் மற்றும் ஒற்றுமையின் அழகை கொண்டாடி வருகின்றனர்.
English Summary
day two lives become one Wedding wishes pour transgender woman