ஆசையாக வளர்த்த ஒரே மகள் அனுப்பிய புகைப்படத்தை பார்த்த அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


தங்களது ஆசை மகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட விரக்தியில் பெற்றோர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பொளையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி - சுமதி தம்பதி. இந்த தம்பதிகளுக்கு ஜனனி என்ற ஒரே ஒரு மகள் மட்டுமே. மகளை நல்ல முறையில் படித்து பெரிய இடத்தில் கட்டி வைக்க வேண்டும் என்று எண்ணிய பெற்றோர்கள், மகளை ஆசைஆசையாக கல்லூரிக்கு படிக்க அனுப்பி படிக்க வைத்தனர்.

மகள் ஜனனி தனியார் கல்லூரியில் பிசியோதெரபி மருத்துவ படிப்பை பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், இருபத்தி மூன்று வயதாகும் ஜனனி அதே பகுதியை சேர்ந்த இறைச்சிக் கடை வைத்து இருக்கும் 41 வயது சம்பத் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் வயது வித்தியாசம் காரணமாக இந்த காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக இந்த காதல் ஜோடி அமைதியாக இருந்து வந்த நிலையில், தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்ட காரணத்தினால் மகள் ஜனனி நேற்று கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு புறப்பட்டுள்ளார்.

வெகு நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த ஜனனி, உடனடியாக தனது காதலர் சம்பத்தை கல்லூரிக்கு வர வைத்துள்ளார். மேலும், இருவரும் திருமணம் செய்து கொண்டு, அந்த புகைப்படத்தை ஜனனி தனது பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து, இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்கள் உயிரிழந்திருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆசை ஆசையாக வளர்த்த மகள், பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்திருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

daughter love marriage parents suicide kunnathur


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->