#Bigbreaking : பஸ் ஸ்டாண்டில் தாலி கட்டிய வீடீயோ விவகாரம்: கடலூர் போலிசார் அதிரடி நடவடிக்கை.!
Cuddalore School students marriage issue on Police station
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்காக சிற்றுந்து பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி சீறுடையில் இருந்த மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவன் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார்.
இதனை அவருடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வருவதும், தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்று, தொடர் சம்பவங்கள் நடைபெறுவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தற்போது இது குறித்து போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த நிலையில், இதில் சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் மாணவி இருவரையும் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Cuddalore School students marriage issue on Police station