கொலை வழக்கில் லஞ்சம்! ரவுடியாக மாறிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஆப்பு!
Cuddalore Police inspector suspended
கடலூரில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், மங்களம் பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன்.
இவர் லஞ்சம் பெற்ற புகாரில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கொலை வழக்கு ஒன்றில் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் பெயரை சேர்க்காமல் இருக்க, காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் 3 லட்சம் ரூபாய் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், மீதமுள்ள தொகையைக் கேட்டு ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தியதில், காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் லஞ்சம் பெற்றது உண்மை என தெரியவந்தது.
இதனை அடுத்து விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், காவல் ஆய்வாளர் சந்திரசேகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளா.
மேலும் அவர் மீது விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Cuddalore Police inspector suspended