தோப்பில் உல்லாசம்.. சடக்கென வந்த கணவனால் திடுக்கிட்ட கள்ளக்காதல் ஜோடி.. அரங்கேறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தோப்பில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை கண்ட கணவன், இருவரையும் கண்டித்ததால் உல்லாச ஆசையில் கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி மீனாட்சிப்பேட்டை ஜெ.ஜெ. நகர் பகுதியை சிறந்தவர் மணிவேல். இவரது மகன் முருகன் (வயது 38). முருகன் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக தனது அக்கா மகள் வனஜாவை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 7 வயதுடைய மகனும், 6 வயதுடைய மகளும் பிள்ளைகளாக உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி முருகன் வீட்டிற்கு அருகேயே மர்மமான முறையில் உயிரிழந்து கிடைக்கவே, அவர் மதுபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக மனைவி கண்ணீர் விட்டு கதறியழுத்துள்ளார். மேலும், காவல்துறை என சென்றால் கணவரின் உடலை பிரேத பரிசோதனை பேரில் கூறுபோட்டுவிடுவார்கள் என்றும், நாமே அடக்கம் செய்திடலாம் என்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். 

வனஜாவின் பேச்சை நம்பிய உறவினர்களும் முருகனின் உடலை அடக்கம் செய்ய முயற்சிக்கவே, நன்றாக இருந்தவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்ய வேண்டும்?. அவர் விஷம் குடித்ததற்கான அடையாளமே இல்லையே? என சந்தேகத்தை எழுப்பிய நபர், அமைதியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மனைவியால் கொலை செயப்பட்டது அம்பலமானது. 

கொலையான முருகனும், அப்பகுதியை சார்ந்த கிருஷ்ணகுமாரும் நண்பர்கள். இதனால் முருகனின் வீட்டிற்கு அவ்வப்போது கிருஷ்ணகுமார் வந்து சென்ற நிலையில், இதன் மூலமாக வனஜாவுக்கும் - கிருஷ்ணகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற, கள்ளக்காதல் ஜோடிகள் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்த விஷயம் முருகனுக்கு தெரியவரவே, முருகன் தனது மனைவியையும், நண்பனையும் கண்டித்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத கள்ளக்காதல் ஜோடி மீனாட்சிப்பேட்டை அருகேயுள்ள மரவள்ளி தோப்பில் உல்லாசமாக இருந்துள்ளது. இதனை நேரில் பார்த்த முருகன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கள்ளக்காதல் ஜோடி முருகனை தாக்கி கொலை செய்துள்ளது. 

பின்னர், மறுநாள் காலையில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி உறவினர்களை நம்பவைத்து அம்பலமானது. இதனையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Kurinjipadi Affair Woman Vanaja Murder his Husband Murugan with Affair Man


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal