வீடியோ காலுக்குப் பிறகு விபரீத முடிவு...? - நடிகை சுபாஷினி மரணம் பின்னணி குறித்து தீவிர விசாரணை...!
strange result after video call Intensive investigation background actress Subhashini death
சென்னை போரூர் அருகிலுள்ள ஒரு பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்த இளம் நடிகை சுபாஷினியின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர், படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை வந்து அந்த குடியிருப்பில் தங்கி, அங்கிருந்து தினமும் ஷூட்டிங்கிற்கு சென்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், நேற்று இரவு தனது அறையில் சுபாஷினி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்ப கட்ட விசாரணையில், கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிய பின்னர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், குடும்பத் தகராறு காரணமாக மனஉளைச்சலில் சிக்கியிருந்தாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.பெங்களூரில் கணவருடன் வசித்து வந்த சுபாஷினி, படப்பிடிப்பிற்காக வந்த இடத்திலேயே இவ்வாறு உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
'கயல்' உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்ததுடன், சில திரைப்படங்களிலும் தோன்றியிருந்தார். சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர்கள் கொண்டிருந்த இவரின் திடீர் மரணம் ரசிகர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
strange result after video call Intensive investigation background actress Subhashini death