234 தொகுதிகளும் நம்மதே...! - வெற்றியில் முழு நம்பிக்கையுடன் ஸ்டாலின் அதிரடி உரை...!
All 234 seats ours Stalin dramatic speech full confidence victory
தமிழக அரசியல் களம் தீவிர சூட்டைப் பெற்றுள்ள நிலையில், வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு கட்சிகள் அனைத்தும் முழு வீச்சில் களமிறங்கியுள்ளன.
இந்த முறை தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க., சசிகலா–டாக்டர் ராமதாஸ் அணி என ஐந்து முனை போட்டி உருவாகி, தேர்தல் களம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாக்குகளை குவிக்க வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சூறாவளி வேகத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தை திருவாரூரில் கடந்த மாதம் 31ஆம் தேதி உற்சாகமாக தொடங்கினார்.
தொடர்ந்து பல்வேறு பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவை திரட்டிக் கொண்டு வருகிறார்.நேற்று காலை விருதுநகரிலும், இரவு மதுரையிலும் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட அவர், இரு கட்ட தேர்தல் பிரசாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
இதன் மூலம் தி.மு.க. மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் 65 வேட்பாளர்களுக்கு ஆதரவு வலுப்பெற்றுள்ளதாக த் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்து, தனது மூன்றாவது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் இன்று மாலை 5 மணியளவில் தொடங்க உள்ளார்.இதனிடையே, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வர முடியாது.
இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகச் சிறப்பாக உள்ளது; 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என உறுதியுடன் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
All 234 seats ours Stalin dramatic speech full confidence victory